Site icon Tamil News

பெண்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் த்திரை பிரம்மோற்சவ விழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

இந்த கோவில் விழாக்களில் முக்கிய விழாவான தேர் திருவிழா இன்று விமரிசையாக நடைபெற்றது.

சுந்தர வரதராஜ பெருமாள் உற்சவ மூர்த்தியாக திருத்தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

அதைத்தொடர்ந்து பெண்கள் வடம் பிடித்து தேர் இழுக்க ஆனந்த ஐயங்கார் தெருவில் இருந்து புறப்பட்ட திருத்தேர் மாட வீதி,

பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு வந்தடைந்தது.

அதையடுத்து பக்தர்கள் தீபம் ஏற்றி சுந்தர வரதராஜ பெருமாளை வழிபட்டனர்.

பக்தர்களுக்கு உத்திரமேரூர் ஒன்றிய குழு உறுப்பினர் ஞானசேகரன், உத்திரமேரூர் பேரூராட்சி மன்ற தலைவர் சசிகுமார் உள்ளிட்டோர் அன்னதானம் வழங்கினார்கள்.

இதில்,ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

Exit mobile version