Site icon Tamil News

விமானத்தில் இருக்கைக்கு மேலே உள்ள லக்கேஜ் பெட்டியில் தூங்கிய பெண்..!(வீடியோ)

சமீபகாலமாக, டிக்டாக் போன்ற சமூக ஊடகங்களில் தொல்லை தரும் பயணிகளின் வீடியோக்கள் வெளியிடப்பட்டன.

அந்த வகையில் 10 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில், இருக்கைக்கு மேலே உள்ள லக்கேஜ் பெட்டியில் ஒரு பெண் படுத்திருப்பது தெரிந்தது.

இந்த வீடியோ அமெரிக்காவில் உள்ள சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானத்தில் எடுக்கப்பட்டதாக செய்தி வெளியானது.இருப்பினும், விமான எண், பெண் விமானம் சென்ற திகதி மற்றும் நேரம் போன்ற சரியான தகவல்கள் தெரியவில்லை.

இதையடுத்து விமான பணிப்பெண் என்ன நடவடிக்கை எடுத்தார் என்பது தெரியவில்லை.இந்த வீடியோ டிக்டாக்கில் 5 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.

பெண் பயணி லக்கேஜ் வைக்கும் இடத்திற்குள் படுத்திருப்பதை பார்த்து சக பயணிகள் மனம் விட்டு சிரிக்கும் காட்சிகளும் உள்ளது.

https://www.instagram.com/reel/C6weOFUqViP/?utm_source=ig_web_copy_link

Exit mobile version