Site icon Tamil News

ஜெர்மனி உள்ளிட்ட 15 நாடுகளில் பரவி வரும் வைரஸ் : புதிய அலையை உண்டாக்கும் அபாயம்!

அதிகளவு தாக்கம் கொண்ட கொரோன தொற்றின் புதிய மாறுபாடு குறித்து பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட XEC திரிபு, இப்போது மூன்று கண்டங்களில் உள்ள 15 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த புதிய திரிபானது தற்போது உலகம் முழுவதும் பரவுவதற்கு வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கலிபோர்னியாவில் உள்ள ஸ்க்ரிப்ஸ் ரிசர்ச் டிரான்ஸ்லேஷனல் இன்ஸ்டிட்யூட்டின் இயக்குனர் எரிக் டோபோல், XEC மாறுபாடு புதிய அலையை உண்டாக்க சில மாதங்கள் மட்டுமே எடுக்கும் எனக் கூறியுள்ளார்.

இப்போது லண்டன் யுனிவர்சிட்டி காலேஜில் உள்ள மரபியல் நிறுவனத்தின் இயக்குனர் பேராசிரியர் ஃபிராங்கோயிஸ் பலூக்ஸ், XEC மாறுபாட்டிற்கு வலுவான தடுப்பூசிகள் அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை கோவிட் தடுப்பூசிகளுக்கான இயக்கம் அடுத்த மாதம் இங்கிலாந்தில் தொடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version