Site icon Tamil News

அமெரிக்க அரசாங்கம் முடங்கிப் போகும் அபாயம் – ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி

அமெரிக்க அரசாங்கம் முடங்கிப் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியுதவி வழங்கும் உடன்பாட்டை எட்டத் தவறினால் இந்த நிலைமை ஏற்படும் என குறிப்பிடப்படுகின்றது.

செனட் சபையின் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் இடைக்கால மசோதாவை ஆதரிக்கின்றனர்.

ஆனால் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் சிலர் அதை எதிர்க்கின்றனர். மக்களவை நாயகர் evin McCarthy மசோதாமீது வாக்கெடுப்பு நடத்தத் தயாராகிறார்.

இருப்பினும் அவருடைய சொந்தக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதில் அவருக்குச் சிரமம் நீடிக்கிறது.

மெக்கார்தியைத் தலைமைப் பொறுப்பிலிருந்து அகற்றுவோம் என்று அவருடைய குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் சிலர் மிரட்டல் விடுத்துள்ளனர்.

Exit mobile version