Tamil News

இஸ்ரேல் மீது மனிதாபிமான சட்ட மீறல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ள அமெரிக்கா

இஸ்ரேல் – பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் திகதி முதல் போர் நடந்து வருகிறது. இதில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனத்தின் காசா உருக்குலைந்துள்ளது. இந்த போரில் இஸ்ரேல் தரப்பில் 1400 பேரும், பாலஸ்தீனர்கள் 34,904 பேரும் உயிரிழந்துள்ளனர்.

காசாவில் இஸ்ரேல் நடத்திய கடுமையான தாக்குதல் காரணமாக அங்கிருந்து மக்கள் எகிப்து எல்லையை ஒட்டிய ரஃபா நகருக்கு இடம்பெயர்ந்தனர்.

இந்நிலையில் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டிருந்த இந்நகரின் மீதும் இஸ்ரேல் ராணுவம் படையெடுக்க துவங்கியுள்ளது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

U.S. says Israel's use of U.S. arms likely violated international law, but  evidence is incomplete | News, Sports, Jobs - News and Sentinel

இந்நிலையில் காசாவில் ஹமாஸுக்கு எதிரான போரின் போது இஸ்ரேலிய ராணுவத்தால் அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்துவது, சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தை மீறியிருக்கலாம் என அமெரிக்கா நேற்று குற்றம் சாட்டியுள்ளது. இதன் காரணமாக இஸ்ரேல் – அமெரிக்கா இடையிலான இரு தரப்பு உறவில் திடீர் சிக்கல் எழுந்துள்ளது.

இதற்கிடையே பாலஸ்தீனத்துக்கு புதிய உரிமைகள் மற்றும் சலுகைகள் வழங்குவதற்காக ஐ.நா.வில் பார்வையாளராக இருக்கும் அந்நாட்டை 194வது உறுப்பினராக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு 143 உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்தன. அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட 9 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. 25 நாடுகள் நடுநிலை வகித்தன.

Exit mobile version