Site icon Tamil News

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முன்னேறிய இலங்கை அணி

இலங்கை, நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடைபெற்றது. இதில் இலங்கை அணி 63 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ICC வெளியிட்டுள்ளது.

இதில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 7 போட்டிகளில் வெற்றி, 2 போட்டிகளில் தோல்வி என 71.67 சதவீதத்துடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலியா 2வது இடத்தில் நீடிக்கிறது.

நியூசிலாந்துக்கு எதிராக வெற்றி பெற்ற இலங்கை ஒரு இடம் உயர்ந்து 3வது இடத்திற்கு முன்னேறியது. தோல்வி அடைந்த நியூசிலாந்து ஒரு இடம் சரிந்து 4வது இடத்திற்கு சென்றது.

இங்கிலாந்து 5வது இடத்திலும், வங்கதேசம் 6வது இடத்திலும் உள்ளன. தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை 7, 8, 9ம் இடத்தில் உள்ளன.

Exit mobile version