Site icon Tamil News

சவூதியிடம் மன்னிப்பு கோரியது இலங்கை அரசாங்கம்!

இலங்கைக்கான சவூதி தூதுவரிடம், வெளிவிவகார அமைச்சு மன்னிப்பு கோரியுள்ளது.

இலங்கை வந்த சவூதி இராஜதந்திரிகள் குழுவிற்கு தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் அழுத்தம் கொடுத்த சம்பவம் தொடர்பில், மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.

குறித்த 3 பேர் கொண்ட சவூதி இராஜதந்திரிகள், அந்தநாட்டில் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள பெருமளவிலான மரங்களை நடும் திட்டத்திற்கு இலங்கையின் பயிரிடல் தொடர்பான அறிவினை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை வந்திருந்தனர்.

இந்த திட்டம் வெற்றியடையும் பட்சத்தில் சவூதி அரேபியாவிற்கான தென்னையை ஏற்றுமதி செய்து சில வருடங்களில் சுமார் 10 பில்லியன் டொலர்களை இலங்கைக்கு வருமானமாக ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரி, சம்மந்தப்பட்ட சவூதி இராஜதந்திரிகளை கண்காணிப்பு பணிகளுக்கு அழைத்து செல்லவில்லை என்று நேற்று ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார்.

Exit mobile version