Site icon Tamil News

‘விடாமுயற்சி’ சூட்டிங்கில் நடந்த அதிர்ச்சி சம்பவம் … கலை இயக்குநர் மாரடைப்பால் மரணம்!

நடிகர் அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ சூட்டிங்கிற்காக அசர்பைஜான் சென்றிருந்த கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் பிரபல கலை இயக்குநரான சாபு சிரிலின் உதவியாளராக 1999ம் ஆண்டு வாழ்க்கையைத் தொடங்கியவர் மிலன். இவர் ‘சிட்டிசன்’, ‘தமிழன்’, ‘ரெட்’, ‘வில்லன்’ மற்றும் ‘அந்நியன்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றினார்.

கடந்த 2006ம் ஆண்டு ‘கலாப காதலன்’ படத்தின் மூலம் மிலன் கலை இயக்குநராக அறிமுகமானார். ‘பில்லா’,’ஏகன்’, ‘வேட்டைக்காரன்’,’வேலாயுதம்’,’வீரம்’, ‘வேதாளம்’,’விவேகம்’,’ சாமி 2′ உள்பட 30க்கும் மேற்பட்ட படங்களில் கலை இயக்குநராக மிலன் பணியாற்றியுள்ளார். மேலும் சக்தி மசாலா, சரவணா ஸ்டோர், ஆர்எம்கேவி, போத்தீஸ் உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட விளம்பரங்களுக்கு கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தில் கலை இயக்குநராக மிலன் தற்போது பணியாற்றி வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு அசர்பைஜானில் நடந்து வந்தது. இந்த நிலையில் சூட்டிங் ஸ்பாட்டில் மிலனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனால், ‘விடாமுயற்சி’ திரைப்படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.

Exit mobile version