Tamil News

பிக்பாஸ் மஹத் பட டீசர் அடி தூள்!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பல படங்களில் ஹீரோவாக நடித்து வரும் மகத் தற்போது லவ்வர் பாய்யாக நடித்துள்ள ‘காதல் கண்டிஷன்ஸ் அப்ளை’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இயக்குனர் ஆர்.அரவிந்த் இயக்கத்தில், மஹத் ராகவேந்திரா, நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘காதல் கண்டிஷன்ஸ் அப்ளை’.

இந்த படத்தை பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான நிதின் சத்யா தயாரித்துள்ளார்.

மஹத்துக்கு ஜோடியாக மும்பையை சேர்ந்த மாடல் அழகி சனா மக்புல் நடித்துள்ளார்.

Share Via Email

மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், மனோ பாலா, விவேக் பிரசன்னா ஆகியோர் நடித்துள்ளனர்.

காதலை தெரிவிக்கும் கதாநாயகனிடம், கதாநாயகி சில நிபந்தனைகளை விதிக்கிறாள்.

அதை மையமாக வைத்தே… காமெடி கலந்து மிகவும் விறுவிறுப்பான காட்சிகளுடன் இப்படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தின் டீசரை இயக்குனர் கெளதம் மேனன் இன்று வெளியிட்ட நிலையில், டீசருக்கு தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பலர் லவ் டூ டே பாணியில் இப்படம் அமைந்துள்ளதாக கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version