Site icon Tamil News

அமெரிக்காவின் பல மாநிலங்களை வெப்ப அலை தாக்கும் அபாயம்!

அமெரிக்காவின் பல மாநிலங்களில், இந்த வாரம் வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அரிசோனாவில் உள்ள ஃபீனிக்ஸ் நகரம், தென்மேற்கு பகுதிகளில் வெப்பநிலை அதிகபட்சமாக 120F (49C) இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் வெப்பநிலை மும்மடங்காக உயர்ந்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.
வெப்பச் சலனம் சில நாட்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், மக்கள் பாதுகாப்பாக இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கலிபோர்னியாவில், சில பகுதிகளில் வெப்பநிலை 120 டிகிரியைத் தொடும் எனவும்,  அரிசோனாவில், பீனிக்ஸ் ஆகிய பகுதிகளில்  110 டிகிரி அதிக வெப்பநிலையை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெக்சாஸில், வெப்பம் ஈரப்பதத்துடன் இணைந்து வெப்பக் குறியீடுகளை ஆபத்தான பகுதிக்குள் தள்ளும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.  105 அல்லது அதற்கு மேற்பட்ட வெப்பக் குறியீடு ஆபத்தானதாகக் கருதப்படுகிறது,
Exit mobile version