Tamil News

விஜய் இலங்கை வராமல் போனதற்கு இவர் தான் காரணமா? நீங்க சரியான அரசியல்வாதிதான்…

லோகேஷ் உடனான லியோ படத்தின் வெற்றிக்குப் பின் விஜய், வெங்கட் பிரபுவு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தான் “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” சுருக்கமாக GOAT.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இதில் கம்பேக் கொடுத்துள்ளனர். விஜய் மற்றும் மீனாட்சி சவுத்ரி உடன் சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன் என பல நட்சத்திர பட்டாளங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.

விஜய் இரு வேடத்தில் கலக்கும் ஆக்சன் திரில்லர் கதையான இதில் திரிஷா ஒரு குத்து பாடலுக்கு நடனமாட உள்ளாராம். கடந்த ஆண்டு ஆரம்பித்த GOAT படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

கிளைமாக்ஸ் காட்சிக்காக இலங்கை செல்ல திட்டமிட்டு இருந்தது GOAT பட குழு. இதை முன்னரே அறிந்து கொண்ட, தமிழ் இனத்துக்கு எதிரான இலங்கையின் முக்கிய புள்ளி ஒருவர் விஜய்யை சந்திக்கும்படி ஆர்வம் தெரிவித்தாராம்.

இந்த சந்திப்பு நிகழும் பட்சத்தில் விஜய்யின் அரசியல் ஆசைக்கு ஆபத்து வரும் என்பதால் சந்திப்பை தவிர்க்கும் பொருட்டு படப்பிடிப்பை இலங்கையிலிருந்து வேறு இடத்திற்கு மாற்ற கட்டளையிட்டாராம் தளபதி.

இலங்கையிலிருந்து ரஷ்யாவிற்கு செல்ல இருந்த பட குழு திடீரென திருவனந்தபுரத்தை முற்றுகையிட்டு உள்ளது. கிளைமாக்ஸ் காட்சிக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்டேடியமை பயன்படுத்த உள்ளதாக தகவல்.

கடந்த 2010ல் காவலன் படத்தின் சூட்டிங்கிற்கு விஜய் திருவனந்தபுரம் சென்றது குறிப்பிடத்தக்கது. விஜய்க்கு தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறாரோ அந்த அளவு கேரளாவிலும் ரசிகர்கள் அதிகம்.

விஜய்யின் படங்கள் ரிலீஸ் ஆகும் என்றாலே பண்டிகை போல் கொண்டாடுவார்கள் கேரளா ரசிகர்கள். இதனால் ஷூட்டிங்கின் இடையே ரசிகர்களையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிளைமேக்ஸ் காட்சிக்கான படப்பிடிப்பு மார்ச் 18இல் ஆரம்பிக்க உள்ளதாக தகவல். ஏற்கனவே பிரபுதேவா அங்கு சென்று சோட்டானிக்கரையில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் தரிசனம் செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இவரை தொடர்ந்து பிரசாந்த் மற்றும் விஜய் கேரளா சென்று படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளார்கள்.

இதேவேளை அண்மையில் விஜய்யின் இலங்கை விஜயம் குறித்து செய்திகள் வெளிவந்த நிலையில், விஜய்யை சந்திக்க இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ திட்டமிட்டிருந்தார் என்ற செய்திகள் இலங்கை ஊடகங்களில் வெளிவந்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்று.

இதேவேளை, விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து மஹிந்தவின் மகனான நாமல் ராஜபக்ஸ வாழ்த்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version