Site icon Tamil News

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை விரைவாக வழங்கும் செயற்திட்டம் ஆரம்பம்!

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை இணையவழி முறையில் வழங்கும் வேலைத்திட்டம் நாளை (15) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடவுச்சீட்டை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்தார்.

புதிய வேலைத்திட்டத்தின் கீழ்  விண்ணப்பித்த மூன்று நாட்களுக்குள் கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும்  குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஒரு நாள் கடவுச்சீட்டு சேவை வழமை போன்று இயங்கும் என அமைச்சர் திரான் அலஸ் மேலும் தெரிவித்தார்.

Exit mobile version