Site icon Tamil News

பிரித்தானியாவில் சடுதியாக வீழ்ச்சியடைந்த பொருட்களின் விலை!

பிரித்தானியாவில் சில பொருட்களின் விலைகள் நீண்ட காலத்திற்கு பின் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் பிரித்தானியா  பொருளாதார மந்த கதியில் இருந்து மீண்டெழுந்துள்ள நிலையில், பேங்க் ஆஃப் இங்கிலாந்து கொள்கை வட்டி விகிதத்தை குறைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும் வரக்கூடிய சிக்கல்களை சமாளிக்க வட்டி விகிதத்தை நிலையானதாக பேண வேண்டும் என நிபுணர்கள் அறிவித்திருந்தனர். ஆகவே தற்போதுவரையில் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை.

இருப்பினும் மக்களுக்கு நன்மையளிக்கும் வகையில் சில பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. பணவீக்கம் மே மாதத்தில் 0.6% ஆக குறைந்துள்ளது. இது ஏப்ரல் மாதத்தில் 0.8% ஆக இருந்தது. நவம்பர் 2021க்குப் பிறகு இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது.

இதேவேளை தேர்தல் காலம் நெருங்கி வருகின்ற நிலையில், கட்சிகள் தங்களது வரவிருக்கும் தேர்தல் அறிக்கைகளில் வாடிக்கையாளர்களுக்கும் சில்லறை விற்பனையாளர்களுக்கும் தங்களின் ஆதரவை விவரிப்பது இன்றியமையாதது என BRC தலைமை நிர்வாகி ஹெலன் டிக்கின்சன் தெரிவித்துள்ளார்.

ஆகவே தேர்தலை முன்னிட்டு பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Exit mobile version