Site icon Tamil News

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது இப்போதைக்கு அறிவிக்கப்படாது – நாமல்

தேர்தலை ஒத்திவைக்கத் தயாராக இருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் அழிந்துவிடும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, கூறுகின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் செயலாளரும் இரண்டு கதைகள் தெரிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற விசேட கூட்டமொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒரு கட்சி என்ற ரீதியில் தேர்தலை ஒத்திவைப்பதை எதிர்ப்பதாகவும், தேர்தலை ஒத்திவைத்த கட்சிகளும் அரசாங்கங்களும் வரலாற்றில் இருந்து அழிக்கப்பட்டுவிட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சிறிமாவோ பண்டாரநாயக்க தேர்தலை இரண்டு வருடங்கள் ஒத்திவைத்ததன் பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்றத்தில் 8 ஆசனங்களுக்கு வீழ்ந்ததாகவும், தேர்தலை ஒத்திவைத்தால் அரசியல் சாசனம் மீறப்படுகிறது என்று கூறினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் இருந்தாலும், வேட்பாளர் யார் என்பது தற்போது அறிவிக்கப்படாது எனவும், நேரம் வரும்போது அறிவிக்கப்படும் எனவும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போதைய அரசாங்கத்தின் பிரதான பங்குதாரராக இருப்பதால் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் தொடர்ந்து கலந்துரையாடி வருவதாகவும் அந்த கலந்துரையாடல்களில் விசேட அதிதிகள் எவரும் இல்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டார்.

Exit mobile version