Site icon Tamil News

13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை!

13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நேற்று (28.7) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

ஜனாதிபதி 13 பிளஸ் என்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டு கருத்துக்களை தெரிவிப்பதாகவும் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தும் அதிகாரம் நாட்டு மக்களுக்கு மாத்திரமே உள்ளதாகவம் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் தற்போது உள்ள தேசிய நல்லிணக்கம் இல்லாமல் போகும் எனவும், பொலிஸ் அதிகாரம் மற்றும் காணி அதிகாரம் ஆகியவற்றை மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.

Exit mobile version