Site icon Tamil News

நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரினார் ஜனாதிபதி

சர்வஜன வாக்கெடுப்பின் பின்னரும் ஜனநாயகம் தொடர்ந்து இயங்கும் ஒரே நாடு இலங்கை என்றும், அந்த நிலைமையை பேணுவதற்கு தான் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எனவே அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

காலி, பெலிகஹாவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய நீதிமன்ற கட்டடத் தொகுதியை இன்று (19) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்புத் திருத்தங்களைச் செய்யும்போது, ​​அனுபவம் வாய்ந்த ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் எனவும், அதன்படி, கே.என் சோக்சி போன்ற சட்டத்தரணிகளுடன் ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.

எவ்வாறாயினும், 2015 ஆம் ஆண்டு அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்பட்ட போது சோக்சி உயிருடன் இல்லை, எனவே இந்த விடயத்தை ஜனாதிபதி சட்டத்தரனி ஜயம்பதி விக்ரமரத்னவிடம் ஒப்படைக்க வேண்டியிருந்ததாக ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிட்டார்.

தாம் புறக்கணித்ததன் காரணமாகவே தற்போதைய பிரச்சினையான நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக மக்களிடம் மன்னிப்புக் கோருவதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version