Site icon Tamil News

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து அரசாங்கத்திற்கு சிவப்பு எச்சரிக்கை

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், மீண்டும் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்கப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அறிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இது தொடர்பில் அறிவிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் ஷானக்யன் தெரிவித்துள்ளார்.

அக்கலந்துரையாடலில் இனப்பிரச்சினைக்கு உடனடித் தீர்வுகளை வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் இதற்கு முன்னர் பல தடவைகள் பல கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர்.

ஆனால் இதுவரை தமது பிரச்சினைகளுக்கு நிரந்தரமானதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுமான தீர்வொன்று கிடைக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே இனப்பிரச்சினைக்கு ஜூலை மாத இறுதிக்குள் தீர்வு காணாவிட்டால் மீண்டும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை என தமது தரப்பு தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சானக்கியன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version