Site icon Tamil News

ஜப்பானில் தனிமையில் வாடும் முதியோர்களின் பரிதாப நிலை

ஜப்பானில் நடப்பு ஆண்டின் முதல் 6 மாதங்களில் சுமார் 37,000ற்கும் அதிகமான முதியோர்கள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அந்நாட்டு ஊடகங்கள் இந்த விடயத்தை தெரிவிக்கின்றன.

குடும்பத்தினரால் கைவிடப்பட்ட முதியோர்களே அதிகளவில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களில் 4,000 பேர் இறந்து ஒரு மாதத்தின் பின்னரே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

அத்துடன் ஜப்பானில் தனிமையில் வாழும் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version