Site icon Tamil News

நாட்டில் அடுத்த தேர்தல் ஜனாதிபதித் தேர்தலாகவே அமையும்

அரசியலமைப்பின் பிரகாரம் இந்த நாட்டில் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும், நிச்சயமாக இந்த நாட்டில் அடுத்த தேர்தல் ஜனாதிபதித் தேர்தலாகவே அமையும் என ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

கண்டி டி.எஸ்.சேனநாயக்க வீதியில் திறந்து வைக்கப்பட்ட மத்திய மாகாண ஜனாதிபதி தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்தை இன்று (07) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை முதலில் நடத்த வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளதாக  அவர் தெரிவித்துள்ளார்.

“இன்று நாம் மத்திய மாகாண ஜனாதிபதியின் செயற்பாட்டு அலுவலகத்தை ஆரம்பித்துள்ளோம். அத்துடன் ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை நாடு பூராகவும் ஆயிரம் தேர்தல் செயற்பாட்டு அலுவலகங்களை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம்.

அந்த செயற்பாட்டு அலுவலகங்களை ஒருங்கிணைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக்கும் பணிகளை நிறைவேற்றி வருகின்றோம்.

எதிர்காலம் மற்றும் இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய உலகத்துடன் தொடர்புகளை கொண்டுள்ளது.மேலும், 1994 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் பல்வேறு துன்புறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

நாடு வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்ட பின்னரே ஜனாதிபதி இந்த நாட்டைக் கைப்பற்ற வேண்டியிருந்தது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் எந்த காலத்திலும் கட்சி உறுப்பினர்களை மறந்து வேலை செய்யமாட்டார். நாட்டில் நிலவும் குழப்பம் காரணமாக அவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது” என்றார்.

Exit mobile version