Site icon Tamil News

வசூலை குவித்து வரும் குட்நைட் திரைப்படம்!

விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய் பீம் நடிகர் மணிகண்டன்,  மீதா ரகுநாத் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த திரைப்படம் தான் குட்நைட்.

நான்கு கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் மிகப் பெரிய வரவேற்ப்பை பெற்றது.  அதாவது ஐடியில் பணியாற்றி வரும் மணிகண்டன் தனக்கு இருக்கும் குறட்டை பிரச்சனையால் முதல் காதலை இழக்கிறார். இந்த பிரச்சனையை மறைத்து வேறு ஒரு பெண்ணை காதலித்து மணக்கிறார்.

ஆனால் சத்தம் என்றாலே ஆகாத அந்தப் பெண் தனது கணவனின் குறட்டையால் படாதபாடு பட்டு வருகிறார். இப்படம் மிகவும் கலகலப்பான ஜானரில் எடுக்கப்பட்டிருந்தது. இதில் மணிகண்டனின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் குட் நைட் படம் முதல் நாளில் இருந்தே நல்ல வசூலை தொடர்ந்து பெற்று வந்தது.  கிட்டத்தட்ட மூன்று வாரம் முடிவடைந்த நிலையில் பத்து கோடி வசூல் செய்துள்ளது.

தொடர்ந்து இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆகையால் எப்படியும் நல்ல வசூலை குட் நைட் படம் பெரும் என்ற நம்பிக்கையில் தயாரிப்பு நிறுவனம் உள்ளது.

Exit mobile version