Site icon Tamil News

இலங்கையில் மண்மேடு சரிந்த விழுந்ததில் மலையக பாதை தடைப்பட்டுள்ளது!

தியகல பகுதியில் மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால், ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், மக்கள் முடிந்தவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் மண்மேடு சரிந்த இடத்தில் இருந்து மேலும் மண்மேடுகள் சரிந்து விழும் அபாயம் உள்ளதால் பிரதான வீதியில் மண் அகற்றும் பணி சற்று தாமதமாகும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையும் கூறுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கொழும்பிலிருந்து வரும் வாகனங்கள் லக்ஷபான நோர்டன் பிரிட்ஜ் ஊடாக ஹட்டனை அடைய முடியும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, கண்டியில் இருந்து வரும் வாகனங்கள் நாவலப்பிட்டி திம்புலபதன தலவாக்கலை வீதியை பயன்படுத்த முடியும்.

இதேவேளை, தெனியாய இரத்தினபுரி வீதியில் மண் மேடு சரிந்து வீழ்ந்தமையினால் அவ்வீதியின் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.

பஸ்கந்த வீதியின் அணில்கந்த பகுதியில் 86 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் வீதியில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version