Site icon Tamil News

உலகிலேயே சக்தி வாய்ந்த இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது!

ஈரானிய மதத்தலைவரின் ஆசிர்வாதத்துடன் ஆரம்பிக்கப்பட்ட ஷியா முஸ்லிம்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஹிஸ்புல்லா (கடவுளின் கட்சி ) உலகின் தலைசிறந்த இஸ்லாமிய தீவிரவாத அமைப்பாகும்.

80களில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பின் கோட்பாடு இஸ்லாமிய கல்வியை போதிப்பது, இஸ்லாம் தேசத்தை உருவாக்குவது, இஸ்ரேலை அழிப்பது, மேற்கத்தேய நாடுகளை மத்திய கிழக்கிலிருந்து விரட்டியடிப்பது போன்ற நோக்கங்களை கொண்டதுதான் இருந்தபோதிலும் இந்த தீவிரவாத அமைப்புக்கு சுன்னி முஸ்லிம்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை.

ஹிஸ்புல்லா தனது தலைமை காரியாலத்தை லெபனானில் கிளைக்காரியாலங்களை சிரியா , யேமன் , மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் அமைத்துள்ளது.

சுமார் ஒரு லட்சம் உறுப்பினர்களை கொண்ட இந்த அமைப்பு ஷியா இஸ்லாமிய கோட்பாடுகளையும் கட்டுப்பாடுகளையும் இஸ்லாமிய ஒழுக்க விதிகளையும் கடைப்பிடிக்கும் ஒரு அமைப்பாகும்.

லெபனானில் அரசியலில் கணிசமான செல்வாக்கை செலுத்தியிருக்கும் அதேவேளை லெபனானின் இராணுவத்தைவிட பலம்வாய்ந்த அமைப்பாகும்.

நெடுந்தூர ஏவுகணைகள், ராக்கட்டுகள், ஆயுதம் உற்பத்தி செய்யும் ஆலைகள் லட்சக்கணக்கான ராக்கட்டுக்களை வைத்திருக்கும் இந்த அமைப்புக்கு தலைமை வகித்தவர் ஹசன் நசுருல்லா.

கடந்த வருடம் பலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் மீது மேற்கொண்ட தாக்குதலின் பின்னர் காசா மீது இஸ்ரேல் தொடுத்த தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேள்மீது ஹிஸ்புல்லா தாக்குதல் தொடுத்தது.

இதன் தொடர்ச்சியாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவின் நிலைகளின் மீது இஸ்ரேல் தொடுத்த வான் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டனர்.

உயர்மட்ட தளபதிகளை இழந்த நிலையில் கடந்த வியாழன்று தொலைக்காட்சியில் தோன்றி இஸ்ரேல் பாரிய விளைவுகளை எதிர்க்கொள்ளும் என்று எச்சரிக்கை விடுத்த நிலையில் நேற்று முக்கிய தளபதிகளுடன் தலைவர் ஹசன் நஸ்ருல்லா அடுத்த தாக்குதல் தொடர்பில் கல்துறையாடிக்கொண்டு இருந்தபோது லெபனானின் தலைநகர் பெய்ருத்தில் ஹிஸ்புல்லாக்களின் தலைமை அலுவலகம் (ஜியாத் கவுன்சில் ) இஸ்ரேலிய வான் தாக்குதலில் சிதைவுண்டது.

அந்த தாக்குதலில் அவர் உட்பட பல தளபதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

சுமார் முப்பது வருடங்கள் ஹிஸ்புல்லா அமைப்பை பலமிக்க ஒரு இயக்கமாக உருவாக்கிய அவர் உட்பட முக்கிய தளபதிகளின் இழப்பு ஹிஸ்புல்லாவை பின் நோக்கி நகர்த்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.

Exit mobile version