Site icon Tamil News

காஸாவில் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை இறக்கிறது

காஸாவில் மோதலின் தாக்கம் காரணமாக ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை உயிரிழப்பதாக பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

நாளாந்தம் பல்வேறு காயங்கள் மற்றும் சுகாதார பிரச்சினைகளால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருவதாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புகளைப் புறக்கணித்து, காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தும் தாக்குதல்களால் குழந்தைகளின் வாழ்க்கை மிகவும் பாதுகாப்பற்றதாக மாறியுள்ளதாக அறிக்கை ஒன்றில் காட்டியுள்ளனர்.

பலஸ்தீன சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, போரினால் 34,049 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 76,901 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.

Exit mobile version