Site icon Tamil News

மத்தியதரைக் கடல் குடியேறிகளின் கல்லறையாக மாறியுள்ளது – பாப்பரசர் வேதனை

கடலில் மூழ்கும் மக்கள் கண்டிப்பாகக் காப்பாற்றப்பட வேண்டும்” என்று புனித பாப்பரசர் பிரான்ஸிஸ் கூறியுள்ளார்.

இந்த நிலையில் புகலிடம் தேடிக் கடல் கடந்துவருகின்றவர்கள் விடயத்தில் “மனிதத்தை” மதிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

“மோதல்கள், வறுமை மற்றும் சுற்றுச்சூழல் பேரழிவுகள் ஆகியவற்றிலிருந்து தப்பி வெளியேறுவோர் , ஒரு சிறந்த எதிர்காலத்திற்கான தங்களது தேடல் அடியோடு நிராகரிக்கப்படுவதை மத்தியதரைக் கடலில் காண்கிறார்கள்,” “இந்த அற்புதமான கடல் ஒரு மகத்தான கல்லறையாக மாறியுள்ளது.

அங்கு பல சகோதர சகோதரிகள் நல்லடக்கத்துக்கான உரிமை கூட இன்றி உயிரிழக்கிறார்கள்”-என்றும் பாப்பரசர் மன வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார்.

இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு பிரான்ஸின் மத்தியதரைக் கடல் நகரமாகிய மார்செய்க்கு வருகை தந்த பாப்பரசர் பிரான்ஸிஸ் அங்குள்ள நோத்த-டாம்-து-லா- கார்ட் பசிலிக்கா (Basilica of Notre-Dame de la Garde) கத்தோலிக்க ஆலயத்தின் குன்றின் உச்சியில் – மத்தியதரைக் கடலை நோக்கிய திசையில் இருந்தவாறு – உரையாற்றினார்.

அவரது உரையைச் செவிமடுப்பதற்காக உள்நாட்டில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வந்த பல்லாயிரக்கணக்கான கத்தோலிக்கர்கள் அங்கு திரண்டிருந்தனர்.

Exit mobile version