Tamil News

மலை உச்சியில் இருந்து பூனை தூக்கி எறிந்த பிரித்தானிய இளைஞன்!

பூனைக்குட்டி ஒன்றை மலை உச்சியில் இருந்து கீழே வீசிய பிரித்தானிய பதின்ம வயது இளைஞரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

பிரித்தானியாவின் Carnforth பகுதியை சேர்ந்த 18 வயதுடைய பதின்ம வயது இளைஞர் ஒருவர் கல்குவாரியின் மலை உச்சியில் இருந்து கருப்பு வெள்ளை நிறம் கொண்ட பூனை ஒன்றை கீழே தண்ணீரில் வீசிய வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விலங்கு மீது நடத்தப்பட்ட இத்தகைய கொடுமையை தொடர்ந்து லங்காஷயர் பொலிஸார் அந்த இளைஞரை கைது செய்தனர்.சமூக ஊடக பயனர்களால் இந்த இளைஞரின் செயல் பொலிஸாருக்கு தெரியவந்ததை தொடர்ந்து லங்காஷயர் பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Shocking moment cruel thug throws cat into quarry sending it plunging  hundreds of feet – as man, 18, arrested | The Sun

பொதுவாக நாட்டில் இத்தகைய விலங்கு கொடுமை செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் தற்போது இணையத்தில் வெளியான வீடியோ காட்சிகளின் உண்மை தன்மை குறித்து பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர். அதே சமயம் விலங்கு கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான எச்சரிக்கையையும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விலங்கு துன்புறுத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 18 வயது இளைஞர் விசாரணையின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார்.சமூக ஊடக பயனர் ஒருவர், விலங்கு கொடுமையில் ஈடுபட்ட இளைஞருக்கு “நோய்” என கடுமையாக சாடியுள்ளார்.

Exit mobile version