Site icon Tamil News

உலகின் செலவு மிக்க நகரங்களின் பட்டியல் வெளியானது!

உலகின் செலவு மிக்க நகரங்களின் பட்டியலில் அமெரிக்காவின் நியூயோர்க் முதலிடத்தை பிடித்துள்ளது.

நகரமாக நியூயோர்க் நகரம் அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிப்பு, கட்டட வாடகை அதிகரித்து வருவதுமே செலவுமிக்க நகரமாக காரணமாகியுள்ளது.

நியூயோர்க் எப்பொழுதும் ஒரு வேலை மையமாகவும், உலகெங்கிலும் உள்ள மக்களுக்காக பணிபுரியும் ஒரு கனவு நகரமாகவும் இருந்து வருகிறது.

குறிப்பாக வெளிநாட்டினரால் ஆதிக்கம் செலுத்தப்படும் பகுதிகளில், நுகர்வோர் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அந்த பகுதிகளில் அதிகரித்து காணப்படுவதும் ஒரு காரணமாகும்.

ஏற்கனவே உள்ள பல ஆராய்ச்சிப்படி, நியூயார்க்கில் உள்ள ஒரு சிறிய அறைக்கு கூட அதிக அளவு பணம் செலவாகும், என்பதால் மக்கள் நகரத்தில் வாழ்வதைத் காட்டிலும் பெரும்பாலான மக்கள் நகரத்திற்கு வெளியே உள்ள பகுதிகளில் வசிக்கத் தேர்வு செய்கின்றனர்.

முன்னதாக ஹொங்கொங் வாழ்வதற்கு மிகவும் விலையுயர்ந்த நகரமாக தரவரிசையில் முதலிடத்தில் இருந்தது. ஆனால் தற்போது 2-வது இடத்திற்கு சென்றுள்ளது. செலவுமிக்க நகரங்களில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா 3வது இடத்திலும், லண்டன் 4-வது இடத்திலும், சிங்கப்பூர் 5-வது இடத்திலும் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

Exit mobile version