Site icon Tamil News

அடுத்த 5 ஆண்டுகளில் உலகெங்கும் ஏற்படவுள்ள பாதிப்பு!

அடுத்த 5 ஆண்டுகளில் உலக வேலைச் சந்தை பெரிய இடையூறுகளை எதிர்நோக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகப் பொருளியல் அமைப்பின் அறிக்கையில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. 800க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் கருத்தாய்வுகளை அடிப்படையாகக் கொண்டு அந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

இயற்கை எரிசக்தி அமைப்புகள் போன்ற பல அம்சங்கள் அதிகமான வேலைகளில் உருவாக்கக்கூடும்.

2027ஆம் ஆண்டுக்குள் 69 மில்லியன் புதிய வேலைகள் உருவாக்கப்படும் அதே நேரத்தில் 14 மில்லியன் வேலைகள் இல்லாமல் போகலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செயற்கை நுண்ணறிவால் பலனும், பாதகமும் உண்டு என கூறப்படுகின்றது. செயற்கை நுண்ணறிவு சார்ந்த கருவிகளைச் செயல்படுத்தவும் நிர்வகிக்கவும் புதிய ஊழியர்கள் தேவைப்படலாம்.

அதே சமயம் 2027ஆம் ஆண்டுக்குள் தகவல் சேகரிப்பு, நிர்வாகம் ஆகியவை தொடர்பான 26 மில்லியன் வேலைகள் அழிந்து போகக்கூடும் என்றது அந்த அறிக்கை கூறுப்பட்டுள்ளது.

ஊழியர்களுக்கு எத்தகைய திறன்கள் தேவை என்பதை நிறுவனங்கள் மறுபரிசீலனை செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version