Tamil News

ஒட்டுமொத்த சினிமாவையும் தன் பக்கம் இழுத்த பழம்பெரும் நடிகருக்கு மூளை பக்கவாதம்

பாலிவுட்டின் மூத்த பழம்பெரும் நடிகரான மிதுன் சக்கரவர்த்தி, உடல் நலக்குறைவு காரணமாக கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 73. தற்போது அவரின் உடல் நிலை சீராக உள்ளதாகவும், மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் அவர் இருப்பதாகவும் அவரின் மகன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

நடிகர் மிதுன் சக்கரவர்த்தி 1966ம் ஆண்டு பெங்காலியிட்ல வெளியான மிரிகயா என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக நுழைந்தார். முதல் படத்திலேயே இவருக்கு, சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்று, ஒட்டு மொத்த சினிமாவையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.

தமிழில் இவர், ‘யாகாவா ராயினும் நாகாக்க’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். 3 முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றுள்ள மிதுன் சக்கரவர்த்திக்கு, கடந்த மாதம் பத்ம பூஷண்விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு நேற்று காலை 10.30 மணி அளவில் திடீரென நேற்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் கொல்கத்தாவில் உள்ள அப்பல்லோ மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மிதுன் சக்ரவர்த்தியின் உடல் நிலை குறித்து கொல்கத்தா அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அவருக்கு மூளையில் இஸ்கிமிக் செரிப்ரோவாஸ்குலர் விபத்து அதாவது பக்கவாதம் இருப்பது கண்டறியப்பட்டுளள்தாகவும், தற்போது, அவர் முழு உணர்வுடன் இருக்கிறார். அவருக்கு மிதமான உணவு கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும், நரம்பியல் மருத்துவர், இருதயநோய் நிபுணர் மற்றும் இரைப்பைக் குடலியல் நிபுணர் உள்ளிட்ட டாக்டர்கள் அவர் தீவிரமாக கண்காணித்து வருவதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

Exit mobile version