Tamil News

72 துப்பாக்கி குண்டுகள் முழங்க விஜயகாந்துக்கு அரசு மரியாதை…. இறுதி சடங்கில் முதல்வர் ஸ்டாலின்

கேப்டன் விஜயகாந்த், டிசம்பர் 27-ஆம் தேதி மாலை உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை 6.10 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரது உடல், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

பின்னர் கூட்ட நெரிசல் காரணமாக.. அண்ணா சாலையில் உள்ள தீவு திடலில் விஜயகாந்தின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை.. விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

இதையடுத்து விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் துவங்கிய நிலையில், அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகம் முன்பு சந்தன பேழையில் வைத்து, 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது.

இதற்காக போலீசார் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். அதே போல் விஜயகாந்த் அடக்கம் செய்யப்பட உள்ள இடம் ஆகியவை தயார் நிலையில் உள்ளது. சரியாக விஜயகாந்தின் இறுதி சடங்கு 4.45 மணிக்கு நடைபெற உள்ளதாகவும், இதில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜயகாந்தின் இறுதி சடங்கை எந்த ஒரு இடஞ்சல்களும் இன்றி கண்டுகளிக்க… 100 பேருக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தேமுதிக அலுவலகம் முன்பு ஏராளமான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கூடி உள்ளதாலும், தேமுதிக தொண்டர்கள் பலர் போராட்டம் நடத்தி சாலை போக்குவரத்தை தடை செய்ய கூறியதால் விஜயகாந்தின் இறுதி சடங்கு நடைபெறும் வரை தற்காலிகமாக… கோயம்பேடு சாலை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version