Site icon Tamil News

இலங்கை வருகின்றார் ஈரானிய அரச தலைவர்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, உமா ஓயா பல்நோக்கு திட்டத்தையும், 25 கிலோமீட்டர் நீர் கடத்தும் சுரங்கப்பாதையையும் திறந்து வைக்க உள்ளார்.

அதன்படி, ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஏப்ரல் 24ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இத்திட்டத்தில் 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு முக்கிய நீர்மின் நிலையங்களும் இணைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகச் சிறந்த தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

5000 ஏக்கர் விவசாய நிலங்களின் பாசனத்தை மேம்படுத்தவும், 145 மில்லியன் கன மீட்டர் தண்ணீரை மாற்றவும், ஒரு வருடத்தில் 290 GW/h மின்சாரம் உற்பத்தி செய்யவும் இத்திட்டம் இலக்கு கொண்டுள்ளது.

Exit mobile version