Site icon Tamil News

அடுத்த வருடத்தின் பிற்பகுதியில் ஜனாதிபதி தேர்தல்?

னாதிபதி தேர்தல் அடுத்தவருட பிற்பகுதியில் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என தான் கருதுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான எதிர்பார்ப்புகள் வலுத்துள்ள நிலையில், ஜனாதிபதி தேர்தலே சிறந்த தீர்வு என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசமைப்பின் அடிப்படையில் தனது முதலாவது பதவிக்காலத்தின் நான்குவருடங்கள் முடிவடைந்த பின்னர் ஜனாதிபதியால் புதிய மக்கள் ஆணையை பெறுவதற்காக ஜனாதிபதி தேர்தலிற்கு அழைப்புவிடுக்க முடியும்.

இதன் காரணமாக ஜனாதிபதியின்  நான்குவருட பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் இந்த வருட இறுதியில் ஜனாதிபதி தேர்தலிற்கான அழைப்பு விடுக்கப்படலாம் என்ற ஊகங்கள் வெளியாகியுள்ளன.

எனினும் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பதவி விலகிய பின்னர் அவரின் முடிவடையாத பதவிக்காலத்தை நிறைவு செய்வதற்கே தற்போதைய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்த பின்னர் அவரின் பின்னர் ஜனாதிபதியாக பதவியேற்றவர்  இராஜினாமா செய்த ஜனாதிபதியின் எஞ்சிய பதவிக்காலத்தையே பூர்த்தி செய்யவேண்டும் அவரால் இடைக்கால தேர்தலிற்கு செல்ல முடியாது என்பது எனது தனிப்பட்ட கருத்து எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version