Site icon Tamil News

அமெரிக்காவில் பரவும் அதிக வீரியம் கொண்ட கொரோனா – ஜனாதிபதி எடுத்துள்ள நடவடிக்கை

அமெரிக்காவில் திய வகையானதும் வீரியம் கூடியதுமான கொரோனா வைரஸ் இனம் காணப்பட்டுள்ளது.

இதையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மேலதிக நிதியினை காங்கிரஸிடம் இருந்து கோர திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மேலதிக நிதி உதவியுடன் புதிய கொரோனா வைரஸ் திரிபுக்கான தடுப்பூசிகள் குறித்து உடனடி ஆராய்ச்சியில் அமெரிக்க விஞ்ஞானிகள் ஈடுபடுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கொவிட் – 19 தொற்றுக்கான எஸ்.பி.பி. 1.5 என அழைக்கப்படும் ஊசி மருந்தினை மேலும் வீரியம் கூடிய தன்மையை கொண்டதாக உற்பத்தி செய்ய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

அமெரிக்க மருத்துவ விஞ்ஞானிகளின் திட்டத்திற்கு அமைய அடுத்த மாதமளவில் கொவிட் – 19 இற்கான புதிய தடுப்பூசிகளை மக்கள் பெறக்கூடியதாக இருக்கும் என ‘வொயிஸ் ஒப் அமெரிக்கா’ தெரிவித்துள்ளது.

இதற்கான அனுமதி அமெரிக்க நோய் தடுப்பு அமைப்பின் பரிந்துரைக்கமைய மேற்கொள்ளப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை, வெள்ளை மாளிகை 40 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி கோரிக்கை ஒன்றினை சமர்ப்பித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் 9.25 பில்லியன் அமெரிக்க டொலர்கள் புதிய வகை கொவிட் 19 நோய் எதிர்ப்பிற்காக செலவிடப்படும் என நம்பப்படுகின்றது.

அதேவேளை, அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவ தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version