Site icon Tamil News

எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்திய -பாகிஸ்தான் போட்டி இன்று

ஆசியக் கிண்ணக் கிரிக்கட் தொடரில் கண்டி – பல்லேகலையில் இன்று இடம்பெறவுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி கிரிக்கட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஷஸ் கிண்ண டெஸ்ட் கிரிக்கட் தொடருக்கு இணையாக உலக கிரிக்கட் ரசிகர்களால் விரும்பிப் பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றாக இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி திகழ்கின்றது.

இறுதி ஆட்டத்துக்கு இணையான பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ள இந்த போட்டி, இன்று பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

உபாதையில் இருந்து குணமடைந்து ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் இந்திய அணியில் இணைந்துள்ளமையினால் நான்காம் இடத்தில் யார் விளையாடுவார் என்ற பிரச்சினைக்கு முடிவு காணப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து நான்காம் இடத்தில் களமிறங்கி அதிக ஓட்டங்களை பெற்ற துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் ஸ்ரேயாஸ் ஐயர் முதலிடத்தில் உள்ளார்.

Exit mobile version