Site icon Tamil News

இத்தாலியை வாட்டியெடுக்கும் வெப்பம் ; மக்கள் கடும் அவதி

ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் வெயில் சுட்டெரித்து வருகிறது. வெப்ப அலை காரணமாக மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். அவர்கள் கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்குப் படையெடுத்து வருகிறார்கள்.

வெப்ப அலையால் பலருக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும் தெற்கு ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில் காட்டுத் தீ பரவி வருகிறது. இதில் கிரீஸ் நாட்டின் முக்கிய பகுதியும் அடங்கும்.

இந்தநிலையில் இத்தாலியின் தலைநகரான ரோம் நகரில் வாட்டி வதைத்து வரும் வெயில் காரணமாக நீரிழப்பு காரணமாக ஒரு நிமிடத்திற்கு 6 பேர் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்னர். வெப்ப அலை தாங்கா முடியாமல், மக்கள் குடிநீருக்காக வரிசையாக நின்று வாங்கி அருந்தும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் 41 ஆண்டுகளில் இல்லாத அளவில் வெள்ளம் பெருக்கெடுத்த நிலையில் ஐரோப்பாவின் பல பகுதிகளில் வெப்பம் சுட்டெரிக்கிறது. இத்தாலியில் 46 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவான நிலையில் மக்களுக்கு, குடிநீர் விநியோகிக்கப்பட்டது.

வெப்பம் காரணமாக சில பயணிகள் சீக்கிரமாக வீடுகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஐரோப்பா மற்றும் ஆசியா நாடுகளில் வெப்ப அலைகள் மோசமடைந்துள்ளன, இது வெப்பம் தொடர்பான உயிரிழப்பின் அபாயத்தை உயர்த்துகிறது என்று உலக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Exit mobile version