Site icon Tamil News

ஜெர்மனியில் மக்களை ஏமாற்றிய கும்பல்! வீடுகள் திடீரென முற்றுகையிட்டு சோதனை

ஜெர்மனியில் பல மாநிலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களை பொலிஸார் முற்றுகையிட்டு சோதனையிடப்பட்டதாக தெரியவந்துள்ளது.

கடந்த 13ஆம் திகதி இந்த முற்றுகை மற்றும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அதாவது மக்களுக்கு கடன் வாங்கி தருவதாக சில குழுக்கள் மோசடியான ரீதியில் செயற்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

அதாவது இவர்கள் சில மோசடியான சம்பள பத்திரங்களை தயார் செய்ததாகவும், இவ்வாறு தயார் செய்த சம்பள பத்திரத்தின் மூலம் மொத்தமாக வங்கிகளுக்கு பல மில்லியன் யூரோக்கள் சேதம் ஏற்படுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.

குறிப்பாக இவர்களுடைய செயற்பாட்டினால் வங்கிகளுக்கு 12 மில்லியனுக்கு மேற்பட்ட யுரோக்கள் சேதம் ஏற்பட்டதாகவும், இந்நிலையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் பொழுது 6.3 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

Exit mobile version