Site icon Tamil News

பிரிக்ஸ் மாநாட்டில் ரஷ்யா கலந்துகொள்ளுமா – கிரெம்ளின் பதில்!

தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்வதா இல்லையா என்பதை விளாடிமிர் புடின் முடிவு செய்வார் என்று கிரெம்ளின் கூறுகிறது.

பிரிக்ஸ் மாநாடு வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளது. தென்னாப்பிரிக்காவிற்கும், ரஷ்யாவிற்கும் இடையில் சுமூகமான உறவு இருந்தாலும், ஐ.சி.சி நீதிமன்றம் புடினை கைது செய்ய பிடியானை பிறப்பித்துள்ள காரணத்தினால் இந்த மாநாட்டில் அவர் கலந்து கொள்வாரா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில், வழக்கமான மாநாடு ஒன்றில் இந்த விடயம் குறித்து கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அவர், சரியான நேரத்திற்கு முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

BRICS குழுவில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவை அடங்கும், இது மேற்கு நாடுகளுக்கு ஒரு சக்திவாய்ந்த வளர்ந்து வரும் சந்தை மாற்றாகக் கருதப்படுகிறது

Exit mobile version