Tamil News

ஹெலிகாப்டருடன் ஏரியில் விழுந்து சிலியின் முன்னாள் அதிபர் பலி!

தனது சொந்த ஹெலிகாப்டரை ஓட்டிச் சென்ற சிலியின் முன்னாள் அதிபர் செபாஸ்டியன் பினேரா உடல் ஏரியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு சிலி. இந்நாட்டின் முன்னாள் அதிபர் செபாஸ்டியன் பினேரா (74). பெரும் பணக்காரரான இவர் இரண்டு முறை சிலி நாட்டின் அதிபராக செயல்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அந்நாட்டின் பிரபல சுற்றுலா தலமான லகோ ரங்கொ பகுதிக்கு செபாஸ்டியன் பினேரா தனது சொந்த ஹெலிகாப்டரை நேற்று ஓட்டிச் சென்றார். அந்த ஹெலிகாப்டரில் செபாஸ்டியன் பினேரா உள்பட மொத்தம் 4 பேர் பயணித்தனர். திடீரென அந்த ஹெலிகாப்டர் தெற்கு சிலியில் உள்ள ஏரியில் விழுந்தது.

Chile's former president Sebastian Piñera dies in helicopter crash

தகவல் அறிந்த மீட்புப் படையினர் விரைந்து சென்று முன்னாள் அதிபர் செபாஸ்டியன் பினேரா உடலைக் கண்டுபிடித்தனர். அவருடன் பயணம் செய்த 3 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் செபாஸ்டியன் பினேராயின் மரணத்தை சிலி உள்துறை அமைச்சர் கரோலினா தோஹா உறுதிப்படுத்தியுள்ளார். அவரது உடல் ஏரியில் இருந்து மீட்கப்பட்டதையும் அவர் உறுதி செய்துள்ளார். முன்னாள் அதிபர் செபாஸ்டியன் பினேரா மரணத்தை முன்னிட்டு மூன்று நாட்கள் தேசிய துக்கமாக அனுசரிக்கப்படும் என்று சிலியின் அதிபர் கேப்ரியல் போரிக் அறிவித்துள்ளார்

Exit mobile version