Site icon Tamil News

மோடி பிரதமராக பதவியேற்ற பின் இந்தியா வந்த முதல் இராஜதந்திரி

அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (17) இந்தியா வந்துள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது தடவையாகவும் பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், இந்தியாவிற்கு விஜயம் செய்யும் முதல் வெளிநாட்டு இராஜதந்திரி இவர் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த பெப்ரவரி மாதம் சல்லிவன் இந்தியாவிற்கு விஜயம் செய்யவிருந்ததாகவும், ஆனால் பல பிரச்சினைகள் காரணமாக அந்த விஜயம் பிற்போடப்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய-அமெரிக்க வருடாந்த மீளாய்வு கூட்டத்திற்காக இந்தியா வந்த தூதரக அதிகாரி இன்றும் நாளையும் (18) இந்தியாவில் தங்க உள்ளார்.

Exit mobile version