Site icon Tamil News

மாலைத்தீவு ஜனாதிபதிக்கு பில்லிசூனியம் வைக்க முயன்றவர்களுக்கு நேர்ந்த கதி

மாலைத்தீவு ஜனாதிபதி முய்சுவிற்கு எதிராக ப்ளக் மெஜிக் (Black Magic) மூலம் பில்லிசூனியம் வைக்க முயன்றதாகத் தெரிவித்து அவரது கட்சியைச் சேர்ந்த 2 அமைச்சர்கள் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த முகமது முய்சு கடந்த ஆண்டு மாலைத்தீவில் ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.

பதவியேற்றதிலிருந்து இந்தியப் படைகளை வெளியேற்றியது உட்படப் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி முய்சு, சீன ஆதரவாளராகப் பார்க்கப்படுகிறார்.

இந்நிலையில் மாலைத்தீவு ஜனாதிபதி முய்சுவிற்கு எதிராக ப்ளக் மெஜிக் (Black Magic) மூலம் பில்லிசூனியம் வைக்க முயற்சிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் ஷாம்னாஸ் சலீம் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தில் அமைச்சராகப் பணியாற்றிவரும் அவரது கணவர் ஆதம் ரமீஸ் ஆகிய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

இந்த இருவரும் அமைச்சர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் 7 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Exit mobile version