Tamil News

சூடானில் தீவிரமடையும் உள்நாட்டு போர்! பரிதாபமாக உயிர் இழந்த 60 பச்சிளம் குழந்தைகள்

சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக, உணவு கிடைக்காமல் குழந்தைகள் காப்பகத்தில் இருந்த ஏறத்தாழ 60 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆசியாவில் உள்நாட்டு போர் உச்சக்கட்டத்தில் இருக்கும் நாடுகளில் சூடான் முக்கியமான நாடாகும். இங்கு கடந்த 2021ம் ஆண்டு ஆட்சியை இராணுவம் கைப்பற்றிய நிலையில் இவர்களுக்கும் துணை இராணுவ படையினருக்கும் இடையே அதிகார போட்டி உருவாகியுள்ளது.

அடுத்து யார் ஆட்சியாளர்களாக மாறப்போகிறார்கள் என்கிற போட்டியில் இரு தரப்பினரும் அவ்வப்போது சிறு சிறு மோதலில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் இந்த மோதல் போக்கானது தற்போது தீவிரமடைந்துள்ளது.

கடந்த சில நாட்களாக உக்கிரமடைந்த இந்த மோதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயமடைந்துள்ளனர்.

போரினால் பொதுமக்கள் உணவு, நீர் இன்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில், கார்ட்டூமில் உள்ள அல்-மய்கோமா ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் அருகே சமீபத்தில் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதன் காரணமாக அந்த பகுதிக்கு வந்து சேர வேண்டிய உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஏதும் வரவில்லை.

எனவே பசியை தாங்காமலும், காயமடைந்த குழந்தைகள் முறையாக சிகிச்சை பெறாமலும் இறக்க தொடங்கின. கடந்த வாரத்தில் மட்டும் 26 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இப்படியாக சுமார் 60 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக குழந்தைகள் காப்பகத்தின் தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.

Exit mobile version