Site icon Tamil News

இலங்கையில் லொத்தர் சீட்டில் ஏழரை கோடி ரூபாய் வென்ற நபருக்கு நேர்ந்த கதி

கண்டி அக்குறணை பிரதேசத்தில் ஏழரை கோடி ரூபாய் லொத்தரில் வென்ற நபரை கடத்தி சென்று தாக்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

நேற்று கம்பளை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் கம்பளை பிரிவு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று குறித்த நபரை கடத்திய கும்பலில் நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

குறித்த லொத்தர் சீட்டு வெற்றியாளரை 10 நாட்களாக அடித்து கம்பளை ரத்மல்கடுவ பகுதியில் உள்ள இரண்டு வீடுகளில் மாறி மாறி அடைத்து வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது.

கண்டி அக்குறணை பிரதேசத்தை சேர்ந்த மொஹமட் ஹாசிம் என்ற நபரே கடத்தப்பட்டு சிறைபிடிக்கப்பட்டுள்ளார். அவரை சிறைபிடித்ததாகக் கூறப்படும் மர ஆலை உரிமையாளர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கம்பளை ரத்மல்கடுவ பிரதேசத்தில் நபர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படை புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய கம்பளை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று சம்பவத்தை உறுதிப்படுத்தி உயர் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.

அதற்கமைய, அதன்படி கம்பளை பிரிவு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று குறித்த நபரை மீட்டுள்ளனர்.

இவர் தம்புள்ளை பிரதேசத்தில் இருந்த போது கம்பளையில் இருந்து சென்ற நான்கு பேர் இவரை கடத்தி காரில் அழைத்து வந்து கம்பளையில் அடைத்து வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்கள் தன்னை கடுமையாக தாக்கி பணம் கேட்டதாக அந்த நபர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version