Site icon Tamil News

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியருக்கு நேர்ந்த கதி

சிங்கப்பூர் – துவாஸ் துறைமுகம் 2ம் கட்ட கட்டுமான தளத்தில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பின் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் ஜூலை 29ஆம் திகதி காலை 9 மணிக்கு நடந்ததாக சிங்கப்பூர் கடல்துறை மற்றும் துறைமுக ஆணையம் (MPA) தெரிவித்தது.

மயக்கமடைந்த நிலையில் இருந்த ஊழியருக்கு வேலைத்தள பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் ஒருவர் CPR என்னும் உயிர்காக்கும் சிகிச்சை வழங்கியுள்ளார்.

பின்னர் தகவலறிந்து அங்குவந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, அந்த ஊழியரை தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றது. ஆனால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அதே நாளில் அவர் மரணித்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசாரணைகள் நடந்து வருவதாகவும், தற்போது இறந்தவரின் குடும்பத்திற்கு ஆதரவு அளித்து வருவதாகவும் MPA கூறியுள்ளது.

உலகளாவிய கூட்டமைப்பு நிறுவனமான Penta Ocean-Hyundai-Boskalis கூட்டு நிறுவனத்தில் ஊழியர் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version