Site icon Tamil News

சிங்கப்பூரில் சண்டையை விலக்க முயன்ற வெளிநாட்டு ஊழியருக்கு நேர்ந்த கதி

சிங்கப்பூரில் நபரின் இடது கை ஆள்காட்டி விரல் நுனியைக் கடித்த நபருக்கு 10 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

40 வயது நிரம்பிய இந்தியாவைச் சேர்ந்த தங்கராசு ரெங்கசாமி தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

சம்பவம் நடந்தபோது அவர் மண் தோண்டும் இயந்திர வாகனத்தை இயக்குபவராகப் பணிபுரிந்தார்.

காக்கி புக்கித்தில் உள்ள தங்கும் விடுதியில் வெளிநாட்டு ஊழியராக வசித்துவந்தார். இவ்வாண்டு ஏப்ரல் 22ஆம் தேதியன்று, தங்கராசு அவருடைய நண்பர் ராமமூர்த்தியோடு மதுபானம் அருந்திக்கொண்டிருந்தார்.

அப்போது போதையில் இருந்த தங்கராசு சத்தமாகப் பேசியிருக்கிறார். அருகே இருந்த ஆறுமுகம் சங்கர் என்ற நபர் அமைதியாகப் பேசும்படி அவரைக் கேட்டுக்கொண்டார்.

சச்சரவு பெரிதானதில் ஆறுமுகம் சங்கர் தங்கராசுவை அறைந்தார். இருவரையும் சண்டையிடாமல் விலக்க முயன்றார் அங்கிருந்த நாகூரன் பாலசுப்ரமணியன் என்ற நபராகும். அப்போது “நாகூரனின் இடது ஆள்காட்டி விரல் தங்கராசுவின் வாய்க்குள் சென்றதாக” நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

Exit mobile version