Site icon Tamil News

தொடர்ந்து வஞ்சிக்கப்படும் ருதுராஜ்- பங்களாதேஷ் டி20 தொடரிலும் இல்லை

இந்திய கிரிக்கெட்டில் திறமை வாய்ந்த இளம் வீரர்களின் ஒருவரான ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு தொடர்ந்து இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவது ரசிகர்களை வெறுப்படைய செய்திருக்கிறது.

27 வயதான ருதுராஜ், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை செய்திருக்கிறார்.

32 முதல் தர டெஸ்ட் போட்டியில் களமிறங்கி ருதுராஜ் 2273 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஆறு சதம், 12 அரை சதம் அடங்கும்.

அதே போன்று லிஸ்ட் ஏ எனப்படும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 77 ஆட்டங்களில் விளையாடி ருதுராஜ், 4230 ரன்கள் அடித்திருக்கிறார்.

இதில் 15 சதம், 17 அரைசதம் அடங்கும். ருதுராஜ் சராசரி 58 என்ற அளவில் இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் ருதுராஜ் உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்திருக்கிறார்.

இதேபோன்று டி20 போட்டிகளில் 140 ஆட்டங்களில் விளையாடி உள்ள ருதுராஜ் 4751 ரன்கக் அடித்திருக்கிறார். இதில் ஆறு சதம், 32 அரை சதம் அடங்கும்.

இது மட்டும் அல்லாமல் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக 66 போட்டிகளில் விளையாடி 2380 ரன்கள் அடித்திருக்கிறார்.

இதில் இரண்டு சதம், 18 அரை சதம் அடங்கும். இப்படி பல்வேறு திறமைகளை கொண்ட ருதுராஜ்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் பதவி கொடுத்து கவுரவித்தது.

இவ்வளவு சாதனைகளை செய்த ருதுராஜ், இதுவரை 6 சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலும், 23 சர்வதேச டி20 போட்டிகள் மட்டுமே விளையாடி இருக்கிறார்.

ஆனால் இதுவரை ஒரு டெஸ்ட் போட்டிகளில் கூட இந்திய அணியில் ருதுராஜ் விளையாடியது கிடையாது.

நிலைமை எப்படி இருக்க ருதுராஜ் அண்மையில் நடத்தப்பட்ட துலீப் கோப்பை தொடரிலும் இரண்டு அரை சதம் அடித்திருக்கிறார்.

இந்த நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் ருதுராஜ் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில் ருதுராஜ் நன்றாக ஆடிய பிறகும் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

அதன் பிறகு இலங்கை அணி எதிரான டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளிலும் ருதுராஜ் சேர்க்கப்படவில்லை.

இந்த நிலையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வங்கதேசத்துக்கு எதிரான தொடரிலும் ருதுராஜ் சேர்க்கப்பட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு காரணம் அதே நேரத்தில் நடைபெறும் இராணி கோப்பை டெஸ்ட் தொடரில் ருதுராஜ் கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

சஞ்சு சாம்சன், ஆர்ஸ்தீப், ரியான் பராக் சிவம் துபே போன்ற வீரர்கள் இராணி கோப்பையில் சேர்க்கப்படாத நிலையில் ருதுராஜ்க்கு மட்டும் அந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் நான்கு வீரர்களும் வங்கதேச t20 தொடரில் விளையாட போகிறார்கள். ஆனால் ருதுராஜ்க்கு அந்த வாய்ப்பு கிடைக்காது.

இதற்கு காரணம் பிசிசிஐ அடுத்த ஸ்டார் வீரராக கில்லை தான் வளர்த்து வருகிறது. கில் இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக இருக்கிறார்.

அவருக்கு போட்டியாக ருதுராஜ் வந்துவிடக் கூடாது என்பதற்காக அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவதாக சிஎஸ்கே ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Exit mobile version