Site icon Tamil News

ஜெர்மனியில் மிகவும் மோசமான நிலையில் காணப்படும் கல்வி நிலை

ஐரோப்பிய ஒத்துழைப்பு அமைப்பானது ஐரோப்பாவில் உள்ள பாடசாலை மாணவர்களுடைய கல்வி தராதர பற்றி மதிப்பீடு செய்வது வழமையாகும்.

அதாவது இந்த கல்வி மதிப்பீடு பற்றிய விடயத்துக்கு பிக்சா என்று சொல்லப்படுகின்ற ஒரு ஆராய்வு அமைப்பு ஒன்று இருக்கின்றது.

இந்த பிக்சா என்று சொல்லப்படுகின்ற ஆராய்வு அமைப்பு நடத்திய கல்வி தராதர பெறுபேறு பற்றிய ஆய்வின் பொழுது ஜெர்மனியுடைய கல்வி தராதரமானது மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதாக பிக்சா என்று சொல்லப்படுகின்ற அமைப்பானது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதாவது ஜெர்மனியின் 9 வது வகுப்பு பாடசாலை மாணவர்கள் கணிதவியல் மற்றும் வாசிப்பு மற்றும் இயற்கை விஞ்ஞானங்களில் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு ஜெர்மன் பாடசாலை மாணவர்கள் மிகவும் மோசமான நிலைக்கு வந்தமைக்கு முக்கிய காரணமாக கொரோனா காலங்களில் ஜெர்மனியில் மற்றைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது பாடசாலைகள் நீண்ட நாட்களுக்கு மூடப்பட்டதால் பாடசாலை மாணவர்களுக்கு கல்வி கற்றக கூடிய வாய்ப்பு கிடைக்கப்படவில்லை என கருத்து வெளியாகியுள்ளது.

Exit mobile version