Site icon Tamil News

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அர்ஜென்டினாவை வதைக்கும் பொருளாதார நெருக்கடி!

அர்ஜென்டினாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பண வீக்கம் அதிகரித்துள்ளது. புதிய ஜீன்ஸ் உடைகளை கூட வாங்க முடியாத அளவுக்கு விலைவாசி அதிகரித்து உள்ளது. இதனால் பழைய துணிகளை வாங்கும் அளவுக்கு நிலமை மோசமாக உள்ளது.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜென்டினாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பண வீக்கம் உச்சத்தை தொட்டுள்ளது. 140 சதவிகிதம் அதிகரித்து இருப்பதால் மக்கள் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாத அளவுக்கு திண்டாடி வருகின்றனர். அமெரிக்கா டொலருக்கு நிகரான அர்ஜென்டினாவின் பணமான பெசொ ( peso)வின் மதிப்பு 349.50 ஆக உயர்ந்துள்ளது. இதனால், ஜீன்ஸ் உடைகள் உள்ளிட்டவற்றை வாங்க முடியாமல் அர்ஜெண்டின மக்கள் தவிப்புக்கு உள்ளாகினர்.

கடுமையான விலையேற்றம் காரணமாக பழைய பொருட்கள், ஆடைகள் வாங்கும் சந்தைகளில் தற்போது வியாபாரம் அதிகரித்துள்ளது. புதிய உடைகள் மற்றும் பொருட்களை விலை கொடுத்து வாங்கும் அளவுக்கு பண மதிப்பு சரிந்து விலையேற்றம் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து இருப்பதால் பழைய உடைகளையே மக்கள் வாங்கி வருகின்றனர். அர்ஜென்டினா தென் அமெரிக்க பிராந்தியத்தில் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக விளங்கி வந்தது.

தானியங்கள் ஏற்றுமதியில் கோலோச்சி வந்த அர்ஜென்டினா, இந்த அளவுக்கு கடுமையான பொருளாதர நெருக்கடியில் சிக்கியிருப்பது கடந்த சில பத்தாண்டுகளில் இதுவே முதல் முறையாகும். நாட்டின் 5-ல் இரண்டு பேர் வறுமையில் வாடி வருகின்றனர். பொருளாதார மந்த நிலை அதிகரித்து இருக்கும் இந்த சூழலில் அடுத்த வாரம் அர்ஜென்டினாவில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.

கடுமையான பொருளாதார நெருக்கடியால் ஆட்சியாளர்கள் மீது மக்கள் கடும் கோபம் அடைந்தனர். இதனால் ஆளும் கட்சி கூட்டணி படு தோல்வியை சந்தித்துள்ளது. ஜேவியர் மிலே தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக தேர்வாகியுள்ளார். அர்ஜென்டினாவில் நிலவும் இந்த பண வீக்க அதிகரிப்பு குறித்து அங்குள்ள மக்கள் கூறுகையில், “முன்பை போல ஒரு வணிக வளாகத்திற்கு சென்று எதுவும் வாங்க முடியாத நிலைதான் அனைவருக்கும் உள்ளது. தற்போது இருக்கும் விலைவாசி உயர்வு யாரும் நினைத்து கூட பார்க்காதது. புது ஜீன்ஸ் துணிகளின் விலை கடந்த ஆண்டில் இருந்ததை விட இரு மடங்கு அதிகரித்து உள்ளது” என்றார். இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து இருக்கும் விலையேற்றம் அர்ஜென்டினாவில் மக்களை தவிப்பு உள்ளாகியுள்ளது. அர்ஜென்டினாவின் பெசோவின் இந்திய ரூபாய் மதிப்பு 0.24 ஆகும். அதாவது அர்ஜெண்டின ஒரு பெசோவின் மதிப்பு இந்திய ரூபாயில், 0.24 மட்டுமே ஆகும்.

Exit mobile version