Site icon Tamil News

இலங்கை மீனவர்களுக்கு வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

வடக்கு,  கிழக்கு ஆகிய கடல் எல்லை பகுதிக்குள் காற்றின் வேகம் பலமாக காணப்படுவதால் மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறும் வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ,  மத்திய,  வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

அத்துடன் மேற்கு மற்றும் தெற்கு கரையோரப் பகுதிகளிலும், மத்திய மலைநாட்டின் மேற்கு பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

தென்கிழக்கு கடற்பரப்பில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக காற்றில் வேகம் வழமைக்கு மாறாக பலத்த தன்மையில் காணப்படும் இந்த தன்மை இன்றைய தினம் முழுவதும் நிலவ கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version