Tamil News

வசூலில் வரலாற்றுச் சாதனை படைக்கும் பொன்னியின் செல்வன் -2!!

மணிரத்னம் இயக்கத்தில் நட்சத்திரங்கள் பலர் நடிப்பில் ஏப்ரல் 28-ம் திகதி திரையரங்குகளில் வெளியான பொன்னியின் செல்வன் -2 படம் மாபெரும் சாதனையை படைத்து வருகின்றது.

இப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை போலவே இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.

பொன்னியின் செல்வன் -2 திரைப்படம் வெளியான நான்கு நாட்களில் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக அறிவித்திருந்த நிலையில் இப்படத்தின் வசூல் குறித்த புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி பொன்னியின் செல்வன் -2 திரைப்படம் தற்போது வரை உலக அளவில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலை குவித்து சாதனை படைத்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

Lyca production claims Ponniyin Selvan makes 300 crores in 11 days
Ponniyin Selvan 2

 

Exit mobile version