Site icon Tamil News

தொழிலாளர்களை உற்பத்தி பங்குதாரர்களாக மாற்றுவதே நோக்கம் – ஜீவன்!

மலையக பெருந்தோட்டத்துறையில் நாள் வேதன முறைமைக்கு பதிலாக இலாப பங்கீட்டு முறையை உருவாக்கி தொழிலாளர்களை உற்பத்தி பங்குதாரர்களாக மாற்றுவதே எமது நோக்காக உள்ளது என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தேசிய தொழிலாளர் ஆலோசனை சபைக்கூட்டம் தொழில் அமைச்சர் மனுச நாணயக்கார தலைமையில் தொழில் அமைச்சில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “ தொழில் செய்யும் பொழுது குளவி கொட்டுதல் உள்ளிட்ட திடீர் அனர்த்தங்களால் உயிரிழப்பு சம்பவங்கள் கூட பதிவாகியுள்ளன. சிலர் அங்கவீனமடைகின்றனர்.

தற்போது தொழில்துறை மாற்றம் பற்றி பேசப்படுகின்றது. ஆகவே, அரச அங்கீகாரத்துடன் தொழிலாளர்களுக்காக காப்புறுதி திட்டமொன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதன்போது  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், தேசிய தொழிலாளர் ஆலோசனை சபைக்குழு உறுப்பினருமான பாரத் அருள்சாமி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் சச்சிதானந்தன், முன்னாள் அக்கரப்பத்தனை பிரதேச சபை தலைவர் ராமன் கோபால் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

Exit mobile version