Site icon Tamil News

இலங்கை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணி

ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெற்றது.

ஆப்கானிஸ்தான் அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றது.இதற்கமைய, அந்த அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி, முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 268 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

269 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 19 பந்துகள் மீதமிருக்க நான்கு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்துள்ளது.

Exit mobile version